Digital Minimalism by Cal Newport


#1

Digital Minimalism by Cal Newport

முகநூலில் நண்பர்களிடமும் குடும்பத்தினரிடமும் உறவுக் கொள்வதைவிட அவ்வப்போது அவர்கள்
வீட்டுக்குச் சென்று பேசிக் களித்தால் என்ன? சமூக வலைத்தளங்களில் முற்போக்குக் கருத்தை
வளர்ப்பதைவிட மக்கள் கூட்டத்தைத் திரட்டி நேரில் பேசினால் என்ன? வெவ்வேறு வலைத்தளங்கள்
மூலமும் நிரல்கள் மூலமும் உணவு வாங்குவதற்கு வீட்டிலேயே சமைத்து மகிழ்ந்தால் என்ன?
இணையத்தில் சிறுகட்டுரைகளைப் படிப்பதற்கும் ஆவணப்படங்களைப் பார்ப்பதற்கும் பதிலாக நூல்
பலக் கற்றால் என்ன? காசுக்கு எல்லாப் பொருளையும் வாங்குவதற்குச் சிற்சிலவற்றைக்
கைத்தொழிலொன்று கற்று நாமே செய்தால் என்ன?

சமூக வலைத்தளங்களில் பதிவொன்றிட்டு அதில் Like வருகிறதா வருகிறதாவென இரண்டு
நிமிடத்திற்கொருமுறை பார்ப்பது ஒரு பிழைப்பா? நண்பர் பதிவு எவ்வளவு மொக்கையாக
இருந்தாலும் அவர் மனம் நோவார் என்பதற்காகச் சும்மா அவரை அமைதிப்படுத்த அவர் பதிவை
Like செய்வதுதான் நட்பா?

பொதுவாக இணையத் தொழில்நுட்பங்களை நுகர்வோர் அவற்றில் குறைகளே கிடையாது நிறைகள்
மட்டுமே என்பது போல் அவைச் சிறு பயனளித்தாலும் அதைப் பயன்படுத்துவர். Digital
Minimalist ஆகிய ஒருவர் இணையத் தொழில்நுட்பங்களில் குறைகளும் உண்டு நிறைகளும் உண்டு
என்பதை அறிந்து குறைகளைக் கடந்த நிறைகளாக இருந்தால் மட்டுமே பயன்படுத்துவர்; அதுவும்
அளவோடு பயன்படுத்துவர். தம் நோக்கை உயர்தொழில்நுட்பமின்றி அடையமுடியுமெனின்
அவ்வுயர்தொழில்நுட்பத்தைப் புறக்கணிக்கும் மனத்தெளிவும் துணிவும் கொண்டவர்.