திண்டுக்கல்லில் கட்டற்ற மென்பொருள் குழுவிற்கான முதல் கூட்டம்


#1

அனைவருக்கும் வணக்கம்,

சென்ற வாரம் FSFTN சார்பில் திண்டுக்கல் அருகில் உள்ள வேலாயுதம்பட்டிக்கு சென்றிருந்தோம். கரடு முரடான பாதை, வழியெங்கும் மரங்கள், வயல்கள். ஆம், திண்டுக்கல்லில் இருந்து நத்தம் செல்லும் வழியில் இருக்கும் வேலாயுதம்பட்டியில் தான் நேற்று FSFTN கூட்டம் நடைபெற்றது. அழகான ஊர். ஊர் முழுவதற்க்கும் ஒரு அரசுப்பள்ளி, போதிய இணைய வசதி இல்லாத ஊர். அருக்காமையில் இருக்கும் ஒரேஒரு Engineering கல்லூரி.

NPR Engineering கல்லூரியில் இருந்து ஆர்வமுள்ள மாணவர்களை வைத்து வெளியில் ஒரு கூட்டம் போடலாம் என முடிவு செய்தோம். அந்த பகுதி மாணவர்களான பூவரசன் மற்றும் பூவேந்தன் கூட்டத்தை ஒருங்கிணைத்தனர். அங்கு ஒரு கட்டற்ற மென்பொருள் குழுவையும், தொடர்ந்து கூட்டங்கள் மற்றும் நிகழ்வுகள் நடத்த கூட்டத்தில் முடிவு செய்தோம்.

அப்பகுதியிலுள்ள குழுவிற்கு நமது FSFTN மற்றும் KSEND GLUG உறுப்பினர் மதன் அவர்களை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டது. போதிய இணைய வசதி இல்லாத, கல்வி இன்னும் பல்வேறு தரப்பு மக்களுக்கு போய் சேராத, ஆண் பெண் சமமான பங்கெடுப்பு இல்லாத, வேலாயுதம்பட்டி போல் பகுதிகளில் FSFTN போன்ற அமைப்புகளின் வேர்கள் பாய வேண்டும். பாயும்.

விரைவில் திண்டுக்கல் முழுவதும்!

சில நினைவுகள் - https://files.fsftn.org/apps/gallery/s/orK6i6ZQk5263qS

நன்றி!


#2

நாம் தொடர்ந்து இது போல் பல்வேறு பகுதிகளுக்கு பயணம் செய்து புதிய குனு/லினக்ஸ் பயனர் குழுக்களை உருவாக்கி ஒருங்கிணைத்திட வேண்டும். சந்திப்பை ஒருங்கிணைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

ஏதேனும் ஒரு கூட்டத்தில் நானும் பங்குக்கொள்ள முயற்சிக்கிறேன்.