இணையம் முடக்கப்படுவதற்கு முன்


#1

இணையம் (Internet) முடக்கப்படும் போது தகவல் பரிமாற்றத்திற்கு பயன்படுத்த வேண்டிய செயலிகள்.

 1. F-Droid
 2. Briar
 3. Manyverse
 4. Trebleshot

மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து செயலிகளும் கட்டற்ற மென்பொருட்களே. இணையம் முடக்கப்படும் போக்கு இந்திய அரசங்கத்தால் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இது வெறும் கூற்று அல்ல என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆயினும் ஆதாரங்களுக்கு இங்கே செல்லவும்.

சரி மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு செயலிகள் குறித்து பார்ப்போம்.

1. F-Droid

ஒட்டுமொத்தமாக இணையத்தை முடக்குவது அல்லது குறிப்பிட்ட சில இணையதளங்களை மட்டும் முடக்குவது என்ற இரு போக்கு நிலவுகிறது. Android பயனர்கள் அனைவரும் PlayStore-யே பயன்படுத்தி செயலிகளை தரவிறக்கம் செய்கின்றனர். நாளை PlayStore-ம் இந்திய அளவில் தற்காலிகமாக முடக்கப்படலாம், காரணம் இணையம் இல்லாமல் பயன்படுத்தக்கூடிய சில செயலிகளையும் அதன் வழியே தான் பெருந்திரள் மக்கள் பதிவிறக்கம் செய்கின்றனர்.

அப்படி PlayStore முடக்கப்படும் பட்சத்தில் அல்லது இப்போதே F-Droid பதிவிறக்கம் செய்துக்கொள்ளுங்கள். F-Droid என்பது PlayStore போன்ற செயலிகளை விநியோகிக்க உதவும் ஒரு சேவை. PlayStore போன்று F-droid தளமும் முடக்கப்படலாம், ஆனால் மற்றொரு Fdroid சேவையை நாமே துவக்கிக் கொள்ள முடியும். மற்றொரு PlayStore-ஐ Google-ஐ தவிர வேறும் யாரும் செய்ய முடியாது.

2. Briar

இணையம் முடக்கப்பட்டுவிட்டது என்று வைத்துக்கொள்வோம். Whatsapp, Facebook, Twitter, Telegram ஆகியவற்றை வைத்துக்கொண்டு அருகில் இருப்பவர்களுக்கு கூட எந்த தகவலும் அனுப்ப முடியாது. காரணம் இவை அனைத்தும் இணையத்தையும், அதில் இயங்கும் சர்வர்களையும் நம்பி இயங்குகின்றன. இணையம் முடக்கப்பட்டால் இந்த சர்வர்களையும் அடையமுடியாது.

அங்கு தான் Off-The-Grid (இணைய கட்டுமானங்களை சாராது) முறையில் இயங்கும் செயலிகள் கைக்கொடுக்கின்றன. Briar அப்படியொரு செயலி. பத்திரிக்கையாளர்கள், தன்னார்வளர்கள், போராட்டும் மக்களுக்காக உருவாக்கப்படது. அனைவரும் பயன்படுத்தலாம். இச்செயலியில் அனைத்தும் Offline-Frist முறையில் செயல்படுகிறது. அதாவது, இணையம் இருந்தாலும் இல்லையென்றாலும், நீங்கள் இதனை திறக்கலாம், கருத்துக்களை எழுதலாம். அது முதலில் உங்கள் சாதனத்தில் பதியப்பட்டுவிடும். பின் உங்கள் அருகில் இருக்கும் நண்பர்களோடு உங்கல் Phone-ல் உள்ள ப்ளூடுத் அல்லது WiFi மூலம் sync செய்துக்கொள்ளலாம்.

இப்போது Sync செய்துக்கொண்ட இந்தக் குழு நகர்ந்து ஆளுக்கொரு திசையில் வெவ்வேறு பகுதிகளுக்கு செல்கிறது என்று வைத்துக்கொள்வோம். இப்போது இதேபோல் போகும் இடமெல்லாம் தெரிந்த நபர்களோடு sync செய்தால், sync செய்பவர்களின் பதிவுகள் மட்டுமல்ல, அவர்களுடன் ஏற்கனவே sync செய்த நபர்களின் பதிவுகளும் இருபுறமும் பரிமாறிக்கொள்ளப்படும்.

இப்படி நபர்கள் அதிகரிக்க, ஒரு கட்டத்தில் தகவலானாது எந்த பாதையில் பயணிக்கிறது என்று யாராலும் யூகிக்கவும் முடியாது, தடுத்து நிறுத்தவும் முடியாது. இதில் ஏற்கனவே ஒருவொருக்கொருவர் தொடர்பு ஏற்படுத்தியிருக்கும் வெவ்வேறு ஊர்களில் இருக்கும் யாரேனும் இருவருக்கு ஒரே நேரத்தில் இணைய வசதி கிடைக்கும் பட்சத்தில் இருவரும் அவரவர் இருக்கும் இடத்திலிருந்தே அனைவரின் தகவல்களையும் இவர்கள் மூலம் sync செய்துக்கொள்ள முடியும்.

பயன்படுத்தும் போது நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியவை:

 1. உங்கள் Briar ID என்பது உங்கள் மொபைல் எண் போன்றது. தெரிந்தவர்களுக்கு மட்டும் கொடுங்கள், அதே போல் உங்கள் நண்பர்களின் எண்களையும் அவர்களிடம் கேட்டுவிட்டு கொடுப்பீர்கள் தானே, அதே போல் தான்.
 2. இச்செயலி தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது.
 3. இப்போது இதில் குழுக்களை உருவாக்கலாம், தனிநபருடன் chat செய்யலாம். ஆனால் அனைத்தும் எழுத்து வடிவில் மட்டும், இன்னும் Photo, video ஆகியவைகளை இணைக்கும் வசதி வரவில்லை.
 4. ஒருமுறை பதிவிட்ட ஒரு கருத்தை அழிக்க முடியாது. எனவே கருத்தை எழுதும் முன் சிந்தித்து நிதானமாக எழுதவேண்டும். அழிக்கமுடியாது என்பது ஒரு செயலியின் குறைபாடல்ல மாறாக அப்படியொரு வசதி அரத்தமற்றதாக இருக்கும். உதாரணத்திற்கு நீங்கள் 5 நபர்கள் மத்தியில் ஒரு கருத்தை கூறுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அந்த 5 நபர்கள் நீங்கள் இவ்வாறு கூறியதை மற்றொரு 5 நபர்களுக்கு தெரிவிக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். இதை நீங்கள் எப்படி தடுத்து நிறுத்த முடியும்? அதைவிட மோசம் உங்கள் கருத்தை அந்த 5-ல் ஒருநபர் திரித்துக்கூறும் வாய்ப்பு. ஆனால் இச்செயலியில் எதையும் திருத்தி எழுத முடியாது என்பதால் உங்கள் கருத்தை யாரும் திரிக்க முடியாது. நீங்கள் பதிவிட்டது பதிவிட்டது போன்றே தான் இருக்கும், பரவும்.
 5. நீங்கள் அதிகம் நம்பும் நபர்களோடு மட்டும் உங்கள் அடையாளங்களை பகிர்ந்துக்கொள்ளுங்கள். இது ஒரு நம்பகத்தன்மை வாய்ந்த இணைப்பை (Trust network) உருவாக்கப் பயன்படும். ஏனெனில் பொய் செய்திகளும் இதே முறையில் பரவலாம். அப்படியெனில் தகவல்களின் உண்மைத்தன்மையும், நம்பகத்தன்மையும் நாம் இணைத்துக்கொள்ளும் ஒவ்வொரு நபர்கள் மீதான நம் நம்பகத்தனையைச் சார்ந்தது.
 6. sync ஆகும் போது நீங்கள் உறுப்பினராக உள்ள குழுக்கள், Forumகளில் உள்ள தகவல் மட்டுமே sync ஆகும். அனைத்துக் குழுவும், Forumகளும் அனைவருக்கும் தெரியாது. உறுப்பினர்களுக்கு மட்டுமே தெரியும். ஆனால் Blog-ல் எழுதும் அனைத்தும் அனைவருக்கும் பரவும் என்று நினைக்கிறேன் (இதனை விரைவில் உறுதிபடுத்துகிறேன்).

3. Manyverse

Manyverse-ம் மேற்கண்ட Briar போலத்தான் ஆனால் சில வேறுபாடுகள் உள்ளன.
Briar-க்கு சொன்ன “நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியவை” இதற்கும் பொருந்தும்.

சில வேறுபாடுகள்

 1. படங்களை சேர்க்கலாம் (Photos)
 2. குழுக்கள் உருவாக்க வசதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
 3. Briar-ல் பொதுவெளி (public timeline / newsfeed) என்பது Blog என்ப்படும். Manyverse-ல் குழுக்கள் உருவாக்க இன்னும் வசதி இல்லாத பட்சத்தில் Facebook public posts அல்லது Twitter ட்வீட்டுகள் போல இங்கு எழுதும் அனைத்தும் இணைந்துக்கொள்ளும் அனைவருக்கும் பரவும். எனவே நினைவில் வைத்துக்கொண்டு பதிவிடுங்கள்.
 4. Social Auditing என்னும் முறை உருவாக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. இதன்படி போலிச் செய்திகள் பரப்புவோர், வதந்திகளைப் பரப்புவோர் தனிமைப்படுத்தப்படுவர்.

இன்றைய தேதியில் Manyverse-ஐ காட்டிலும் Briar முறைப்படுத்தபட்ட தகவல் பரிமாற்றத்திற்கு வழிவகுக்கிறது. தகவல்களை பிரித்து வைத்துக்கொள்ள உதவுகிறது. Manyverse-ல் கொண்டுவரப்படவுள்ள வசதிகள் வரும் நாட்களில் இவற்றை ஈடுகட்டும் என்பதில் சந்தேகமில்லை.

Manyverse, Briar ஆகிய இரண்டையும் Social Trusted Network உருவாக்க பயன்படுத்திக்கொள்ளவும்.

4. Trebleshot

Shareit பயன்படுத்தியிருப்பீர்கள் அல்லவா? அதே வகையைச் சார்ந்தது தான் Trebleshot. PlayStore-லிருந்து இந்தந்த நாடுகளுக்கு, பகுதிகளுக்கு ShareIt மறைக்கப்பட வேண்டும் என்றால் அரசாங்கம் Google நிறுவனத்துடன் இணைந்து அதனை மறைக்க முடியும். கிடைக்க முடியாமல் செய்ய முடியும். எனவே கட்டற்ற மென்பொருளான Trebleshot-ஐ நிறுவிக்கொள்க.

உங்கள் சாதனத்தில் உள்ள செயலிகளை அருகில் இருக்கும் சாதனத்திற்கு அனுப்ப முடியும். Fdroid, PlayStore போன்றவை முடக்கப்பட்டாலும் செயலிகளை வைத்திருப்பவர்கள் Trebleshot பயன்படுத்தி செயலிகளையும் பரப்ப முடியும்.


Briar, Manyverse, Trebleshot ஆகிய மூன்றும் இணைய கட்டுமானத்தை சாராது இயங்குபவை. ஆயினும், நாம் மாற்று இணையமான, மக்கள் இணையம் என்று நாம் கூறும் மாற்றும் கட்டுமானத்தை (Alternative Infrastructure) Community Network-களை உருவாக்கும் முயற்சியில் இறங்க வேண்டும்.


#2

#3

I’m moving to Open source apps as much as possible.

But briar is not working for me.
Treble shot also same. Its not working as like shareIt
Can someone help on this?


#4

Someone might be able to help you out here. But, please describe your problem trying to be as specific as possible. Describe what steps you did, what you expected and what you actually got. Post any error messages, screenshots, etc.

Thank you! :grinning:


#5

:heart_eyes:

Sure. please explain more. What is not working? What did you try to do?